ஓர் சுயநலத்தருணத்தில்,
சிதறிப் போனது..
தேவதைகள் ஆசிர்வதித்துத் தந்த
நம் காதல் மாலை..
நடவையில் இருக்கும்
சபிக்கப்பட்ட பொழுதுகளில்,
"உனக்கு முன் மரணம் வந்தால்
நீ வந்து சேரும் வரை..
மூடாது என் விழிகள் "
என்று,
நாம் கதைத்த காதல் நொடிகள்
கைகொட்டிப் பரிகசிக்கின்றன.
இதோ....
இமை மூடா,
உயிர்ச் சவமாய் ,
உலவிக்கொண்டிருக்கின்றேன்.
காதல் வளையம் தகித்து,
கருகிப்போன என் தேகத்துக்கு,
மலர்வளையம் சமர்ப்பிக்கவாவது...
மறக்காமல் வா. ..
...ஷஹி...
Nice one..
ReplyDeleteமறக்காமல் நானும் பின்னூட்டம் இட்டு விட்டேன் :)
nallaayirukku..
ReplyDelete@இளங்கோ ரொம்ப நன்றி இளங்கோ..
ReplyDelete@வெறும்பய..நன்றி நண்பா..
ReplyDelete"உனக்கு முன் மரணம் வந்தால்
ReplyDeleteநீ வந்து சேரும் வரை..
மூடாது என் விழிகள் "
///
nice one madam,really too good..
மிக்க நன்றி திரு.சிவா..
ReplyDelete