உன் அண்மையில் சிலிர்த்து வீங்கும்
காற்றின் அணுக்களை எல்லாம்
மூச்சில் கரைத்து
என்
திசுக்களில் சேமிக்கின்றேன்..
தனிமையின் உக்கிரத்தில்
தகிக்கும் பின்னிரவுகளில்,
திசுக்களை வெடிக்கச் செய்து,
பிரசவித்துக் கொள்வேன் உனை..
முத்தப் பூக்களால் நிரம்பித் தளும்பும்
நம் பால் நிலாகாய் வனத்தில்
அலைந்து திரிவோம் நாம்..
வா.,
பூக்களைச் சேகரித்தும்
பூக்களைச்சிதற விட்டும்..
முதல் கிரணத்தின் வெம்மை பட்டு
கோர்த்த கரங்கள் வியர்க்கும் கணத்தில்
என் உயிர் கிழிந்தழ
விட்டெனை விலகாதே நீ..
அரையிருட்டின் குளுமைக்குள்ளேயே
புன்னகைத்து விடை கொடுக்கின்றேன்,
உன்னிதழ்களின் ஈரத்தையும்
மார்பின் கதகதப்பையும்
மீண்டுமோர் நிலா இரவில் திருப்பித்தரும் வாக்குறுதியோடு..
..ஷஹி..
நல்ல ஃபீல் ஷஹி, வாழ்த்துகள்.
ReplyDeleteThanks Murali..i think this is my best so far..
ReplyDelete//உன் அண்மையில் சிலிர்த்து வீங்கும்
ReplyDeleteகாற்றின் அணுக்களை எல்லாம்
மூச்சில் கரைத்து
என்
திசுக்களில் சேமிக்கின்றேன்..//
What a start...!!! amazing!!!
நீங்க எழுதியதிலேயே எனக்கு மிகவும் பிடிச்சது இந்த கவிதை தான்... அற்புதம்... ஆங்கிலத்துல
மாஸ்டர் பீஸ் ன்னு சொல்லுவாங்கல்ல அது தான் இது... ஆனா இதவிட உங்களால நல்லா எழுதமுடியும் ன்னு எனக்கு தோணுது....
--
அன்பின்
ப. ஜெயசீலன்.
o! thanks jeyaseelan...im flattered
ReplyDeleteஅடுத்த பதிவிட்டால் என் மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்...
ReplyDeletejaya20.04.1986@gmail.com