Search This Blog

Friday, August 27, 2010

உறக்கம் கலைப்பான்..


உறக்கம் தொலைத்திட்ட
ஓரிரவுக்கு மறுநாள்..
உன்னிடம் சொன்னேன்..
நேசத்தை!

விழிகள் பளபளக்க..
ஆமோதித்தாய் நீயும்.
ஆன்றிரவும் ,
தொலைந்தது
தூக்கம்!

ததும்பிக்கொண்டிருந்த
நேசக் கோப்பையைப்
போட்டுடைத்தாய்
நீயே!
நீண்டன இரவு பல..

மீதம் இருந்த
உறக்கம்
கலைக்கவே போல்..
மீண்டும் வந்தாய்!

நீ என்ன..
வெய்யிலா?
வெளிச்சமா?
விடியலா?

5 comments:

  1. ஒரு வேளை வெளிச்சமாய் வந்து வெயிலாய் மாறிய விடியலாய் இருப்பாளோ..

    ReplyDelete
  2. இருப்பா'னோ'வாக இருக்கக் கூடாதா?..

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா எழுதுறீங்க ஷஹி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அழகாயிருக்கிறது

    ReplyDelete
  5. நன்றி ஜெயா, நன்றி தர்ஷன்...

    ReplyDelete

Related Posts with Thumbnails