Search This Blog

Tuesday, August 31, 2010

அம்மா நான்..





அதட்டும் தொனியிலான உன் பேச்சு,
திமிரும் உன் தோள்களுணர்த்தும் உன் ஆளுமை,

நண்பனை உயிராகவும்,
சகோதரியை விரோதியாகவும்..
பாவிக்கும் உன் மனோபாவம்,

வேகமாய்க் கறுத்தடரும் மீசையில்
ஒளிந்து கொள்ளும் உன் பிள்ளைமை..

இறுகச்சாத்தப்படும் மன மற்றும் அறைக் கதவுகள்..

உன் கைபேசிக்குள் காணாமல் போகும்
உன்னைப் பற்றிய என் கனவுகள்,

முள் போலவும் ,மீண்டும் அலையாகவும்
மீள மீளத் திருத்தப்படும் உன் சிகை,

குளியலறைக்குக் கிடைக்கப் பெறும்
உன்னுடனான கூடுதல் நிமிடங்கள்,

உன் தந்தை,
திடீரென...
என் கணவனாக மட்டும் பார்க்கப்படும்
அவலம்,

இரு சக்கர வாகனமும்,
பின்னமர்ந்து செல்ல தோழியொருத்தியும்
இல்லாதவனெல்லாம் சபிக்கப்பட்டவன்
என்ற உன் சித்தாந்தமும்,

வளர்கிறாயா ?விலகுகிறாயா?
என்ற தாபத்தில்
தள்ளுதெனை எக்கணமும்!

உறங்கும் போது.....
உனை....
நீ அறியாமல் பார்க்கும்
அந்த சில விநாடிகள்
தவிர்த்து!

6 comments:

  1. A million words would not bring you back, I know because I've tried. Neither would a million tears, I know becoz I've cried. Luv u akka!

    ReplyDelete
  2. நன்றி ஜெயசீலன்...

    ReplyDelete
  3. கவிதை அருமையாக இருக்கிறது....வாழ்த்துகள்
    ............................................

    நீங்கள் என் பதிவில் கருத்து கூறியது எரிச்சல் படுவதகாக இருந்தது என்று சொல்லிருகிரீர்கள் ஏன் என்று எனக்கு புரியவில்லை....நீங்கள் சொல்லும் கேள்வி ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் பெண்கள் எல்லாம் இப்போது அவர்களுடைய அலங்காரத்தை துறந்து ஆண்களாக மாறுகிறார்களே இது தேவையானதா....அப்படி மாறலாமா மாறினால் சரியாக இருக்குமா என்று கேட்டார். அவருக்கு என் பதிலை இப்போது உள்ள பதிலாய் சொன்னேன் நான் அவருக்கு சொன்ன பதிலையே கேள்வி பதிலாய் தெரிவித்தேன்....இதில் நான் சொல்லவந்தது பெண்கள் பெண்களாய் இருக்கலாம். ஆண்கள் போல் மாற எந்த தேவையும் இல்லை எனபது....இதில் ஓஷோவின் கருத்தையும் மேற்கோள்காட்டி சொன்னேன்,,,இது தவறாக தெரியவில்லை ஆனால் உங்களுக்கு எரிச்சல் பட்டிருக்கு....பல பழைய குப்பைகளை கிளரும் போது சிறந்த பதிவர் என்ற பட்டத்தையும் துறந்துதான் ஆகணும்.....பட்டம் எனபது என்ன நமக்கு நாமே சுடிகொள்வதுதானே....இருந்தும் கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி....உங்கள் மெயில் தெரியவில்லை அதனால்தான் உங்கள் பதிவில் உள்ள கமெண்ட் பாக்ஸ் போட்டேன் தவறாக என்ன வேண்டாம்....

    ReplyDelete
  4. //வளர்கிறாயா ?விலகுகிறாயா?
    என்ற தாபத்தில்
    தள்ளுதெனை எக்கணமும்!

    உறங்கும் போது.....
    உனை....
    நீ அறியாமல் பார்க்கும்
    அந்த சில விநாடிகள்
    தவிர்த்து!//

    மிகவும் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் உணர்வுகள்.. குறிப்பாக கடைசி வரிகள்.. மிக நன்று..!!

    ReplyDelete

Related Posts with Thumbnails