Search This Blog

Monday, August 23, 2010

துயரம் தவிர்...


புறப்பட்டு விட்டதாலேயே..
போய்ச்சேர வேண்டியதில்லை!
பயணித்த சுகம் போதும் ...
பாதியில் திரும்புகிறேன்!

சக பயணியின் ,
சௌக்கியம் முக்கியம்!
சங்கடங்கள் தவிர்க்க..
சந்தோஷமாய்..
விடை கொடு!

முட் காடு மீதெந்தன் ,
பாதம் பட வேண்டாம்!
பார்வை பட்டாலே,
புண்ணாகும் என் நெஞ்சம்!

சுற்றி நீ காட்டுகையில்..
சுகமாய் சாய்ந்திருந்தேன்..
சொக்கின கண்கள்..
ஆனாலும்
சுயமாய் இருந்தேன் நான்!

என்னை நான் தொலைத்து..
இன்னுயிர் வளர்க்க விருப்பமில்லை!
வாழும் வரையிலாவது,
சாகாமல் இருக்கிறேனே!

7 comments:

  1. என்னை நான் தொலைத்து..
    இன்னுயிர் வளர்க்க விருப்பமில்லை!
    வாழும் வரையிலாவது,
    சாகாமல் இருக்கிறேனே!

    //

    அருமையா எழுதியிருகீங்க..

    Please remove Word Verification

    ReplyDelete
  2. நன்றி....vp அவர்களே!(இப்படியெல்லாம் பேரு வெச்சுக்கிட்டா எப்புடி கூப்புடுறது?)

    ReplyDelete
  3. அருமை ஷகி
    விட்டுக் கொடுத்தல் என்னும் பெயரில் நம் சுயத்தை தொலைப்பதில் உள்ள வலியை சொல்லியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன் அருமை.

    ReplyDelete
  4. word verification ஐ தூக்கி விடுங்கள் ஷஹி
    தமிழ்மணத்தில் இணைப்பதில்லையோ

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நீங்கள் நினைத்ததேதான்...தர்ஷன், நான் சொல்ல விழைந்தது...

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

Related Posts with Thumbnails