Search This Blog

Tuesday, June 29, 2010

அதுவா.....?


"அன்பென்று"...அறிவாளிகளால்! அறியப்படும்....
இது....ஆதிமனிதன் போட்டு வைத்த ஆசைத் தடம்!
வாழ்வுத்தேர் ஓட உதவும் வடம்....
நட்புகள் பல நேரம் இதில் முற்றும்...
"அசிங்கமென்று"..உதட்டளவில் அறிவிக்கப்படும்.
இதில்லாவிட்டால்................
கவிதை உலகம் அவஸ்த்தைப்படும்,
ஒப்பனையும்,ஒய்யாரமும்..நிறுத்தப்படும்..
கதைகளுக்கும்,காவியங்களுக்கும் பஞ்சமேற்படும்!
பிறப்பும்,அதனால் இறப்பும் கூட தவிர்க்கப்படும்.
பள்ளி நாள் நினைவுகள்..வெறுக்கப்பெறும்.
பூக்கள் கடவுளர்க்கே சாற்றப் படும்,
புன்னகைகள் பூத்தல் குறைந்து போகும்.
புகழுரை என்பதே மறக்கப்படும்..
விழி மொழி என்ற ஒன்றே அழிந்து போகும்..
சூரியன் சுற்றல்,பூமிக்குச் சிரம்மாய்ப் படும்!!!

5 comments:

  1. காதல் இல்லையென்று சொன்னால் பூமியும் இங்கில்லை.

    "நட்புகள் பல நேரம் இதில் முற்றும்"

    "பிறப்பும்,அதனால் இறப்பும் கூட தவிர்க்கப்படும்."

    "சூரியன் சுற்றல்,பூமிக்குச் சிரம்மாய்ப் படும்!"

    அருமையான வரிகள் ஷஹி!

    ReplyDelete
  2. entha kavithal enakkae,...enakaa...

    ungal anumathiyillamal...ek kavithayai naan enkku samarpithu kolgiraen!!!

    ReplyDelete
  3. உனக்கில்லாதது எனக்கெதுக்கு....குட்டி!

    ReplyDelete

Related Posts with Thumbnails