Search This Blog

Wednesday, June 30, 2010

ஆஹா...பரவசம்...


இது என்ன உணர்வு?
கவிதைகள் எழுதிடத் துடிக்கின்ற கரங்கள்...
கனவுகள் காணப் பறக்கின்ற மனது,
இயற்கையைக் கண்டு நெகிழ்கின்ற நெஞ்சம்..
இயலாமை கண்டு ஊறும் கண்ணீர்...
இது என்ன உணர்வு?
பாடல்கள் கேட்டால் சேர்ந்து பாடும் உதடுகள்,
பழைய ஞாபகத்தில் மலர்ந்து விரியும் புன்னகை..
எதிரியையும் எளிதாய் மன்னிக்கும் ஈரம்..
எதிலும் இறைவனைக் கண்டு விடும் எண்ணம்!
இது என்ன உணர்வு?
வயது மறக்கச் செய்திடும் மாயம்,
வீதியில் இறங்கி விளையாட விருப்பம்..
சிறகுகள் விரித்துப் பறந்திடும் தாகம்..
சில்லென்ற மழையில் நனைந்தாடத் தோன்றும்...
இது என்ன உணர்வு?

6 comments:

  1. சீக்கிரம் நல்ல மன நல மருத்துவரா பாரும்மா :-)

    ReplyDelete
  2. நீங்க பாத்த மருத்துவரையே சிபாரிசு செய்ங்க தலைவா!

    ReplyDelete
  3. verenna Kaathal thaan!!!!!

    madhu

    ReplyDelete
  4. கவிதை மிகவும் நன்றாக உள்ளது.
    வாழ்க, கவிதைப் பயணம் தொடர வாழ்துக்கள்.
    பிரெம்குமார்.

    ReplyDelete
  5. கவிதை மழை தொடர்ந்து பொழிய வாழ்த்துக்கள்.
    பிரேம்குமார்.

    ReplyDelete

Related Posts with Thumbnails