சிறுமி நான்...
விருப்பங்கள் வெகு சிலவே எனக்கு..
பரிட்சை இல்லாத பள்ளி நாட்கள்,
அடிக்கடி வேண்டும் பிறந்த நாட்கள்..
பாடல்கள் பாடும் ஒலி நாடாக்கள்..
அவ்வப்போது கிடைக்கும் வண்ண பேனாக்கள்!
இளைஞி நான்....
விருப்பங்கள் வெகு சிலவே எனக்கு..
கனவில் ஒரு இல்லம்,
நண்பனாய் ஒரு துணைவன்,
லட்சியம் என்றும் ஒன்று!
உயிர்ப்புடன் வாழ மிக விரும்பியதுண்டு.
மங்கை நான்....
விருப்பம் ஒன்றே தான் எனக்கு...
மீண்டும் சிறுமியாக மாட்டேனா நான்?
வாழ்க்கை நம்மை விட வேகமாய் ஓடிக் கொண்டிருப்பதன் அழகான பதிவு!
ReplyDeleteஅப்படித்தான் தோன்றும் ஆண்களுக்கு...
ReplyDeleteநிறைவேறாத கனவுகள் நினைக்க வைக்குது பெண்களை அப்படி!
exactly......u r 100% true...
ReplyDeletethank u naags....
ReplyDelete