Search This Blog
Thursday, July 15, 2010
குட்டி மனுஷி...
கால் முளைத்த புஷ்பம்....
புன் சிரிக்கும் தென்றல்....
அணைத்து முகரும் போது,
உயிரின் வாசம் வீசும்!
நெஞ்சை உதைக்கும் கால்கள்...
நின்ற துடிப்பைத் தூண்டும்!
கன்னம் தடவக் கைகள்...
தவங்கள் செய்ய வேண்டும்!
சின்னச் சிரிப்பைப் பார்த்தால்..
மனக் காயம் ஆறிப் போகும்!
பட்டுக் கேசம் தடவி..
மயிலிறகு தோற்கும்!
இறுகப் பற்றும் விரல்கள்...
முத்த மழை வெல்லும்!
நீராட்டிய தண்ணீர்...அது..
ஆசி வழங்கும் பன்னீர்!
இதழ்கள் சிந்தும் முத்தம்...
ஆயுள் வளர்க்கும் தீர்த்தம்!
உன்னை அணைத்த கரங்கள்...
வாளேந்த மறுக்கும்!
மழலைப் பேச்சு கேட்டால்..
தோட்டாக்களும் நமுக்கும்...!
dedicated to jenithaa's baby..Arshaa
Labels:
baby,
baby poems,
kavithai,
tamil,
tamil poem
Subscribe to:
Post Comments (Atom)
மழலையின் இனிமை கவிதையிலும்!
ReplyDelete"நமுக்கும்" அப்டின்னு வார்த்தை இருக்கா? இல்லை சொந்த சரக்கா :-)
"நமுத்துப் போச்சு" ...என்று பேச்சு வழக்கில் சொல்வதில்லையா?...
ReplyDelete