தெருவோரமாய் நின்றிருந்தேன் ...
கைகள் பிசைந்த வண்ணம்,
கால்கள் நடுங்க...
முகம் கருத்து,
கண்கள் ஆறாய்ப் பெருக..
தொலைந்ததைத் தேடியவளாய்,
வருவோர், போவோரின் கேள்விப் பார்வைகள்,
கடைக்கார அண்ணாச்சியின்..
பரிதாப விழிவீச்சு!
பள்ளிச் சிறுமி ஒருத்தியின் கேள்வியில்..
கதறி அழுதேன்...தெரியலையேம்மா என்று!
கேட்டாளே ஒரு கேள்வி!
என்னக்கா தொலச்சீங்க என்று!!!
அருமை !
ReplyDeleteவாழ்க்கையில் என்ன வேண்டும் என்றே தெரியாமல் வாழ்வதைப் போலத்தான் இந்தத் தேடலும்!
தங்களுக்குத் தெரியுமா தல?
ReplyDeleteஅது தெரிஞ்சா தேடல் நின்னுடுமே!
ReplyDelete