Search This Blog

Sunday, July 18, 2010

காலம்..


குழந்தையாய் இருந்த போது,
ஓயாமல் கேட்பேன் கேள்விகள்...
விபரமாய் பதில் வரும் ..அப்பாவிடமிருந்து.
இப்போது அவர் உறங்கும் நேரம் தவிர,
அருகில் செல்வதில்லை நான்!
நச்சரிப்புகளுக்கு ஆளாக நேரமில்லை எனக்கு!
நாளையைப் பற்றிய கவலையும் எனக்கில்லை.
வசதியான முதியோர் இல்லத்தில்...
எனக்கான , முன்பதிவுகள் ..
முடித்துவிட்டேன்!

5 comments:

  1. அருமை... என் பிளாக்கில் தந்தையின் கடிதம் படிக்கவும்.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான கவிதை...பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. நன்றி அபி..
    நன்றி சரவணன்..வருகை தந்தமைக்கும், பின்னூட்டம் இட்டதற்கும்..
    நன்றி சுடர்விழி...உங்கள் தளம் அருமை..
    நன்றி மாதங்கிசந்துரு

    ReplyDelete

Related Posts with Thumbnails