( picture courtesy heavensgain.com )
சாரா
ஒரு மலர் உதிர்வது போல
மறைந்து போனாள்
என் தம்பியின் குழந்தை
துஷ்டிப்பயண நெடுகிலும்
இறுதிச் சடங்கிலும் கூட
பேச நிறைய விசயம் இருந்தது
வந்த சனத்துக்கு
நேற்றிரவு கனவில் வந்தவளிடம் கேட்க
எனக்கும் இரண்டு கேள்விகள் இருந்தன
எப்படிப் பிரிந்தது உன் ரூஹு ?
அப்படித்தான் மாமி ...
நீ எழுதியிருக்கிறாயே,
ஒரு பூ உதிர்வது போலத்தான் !
இத்தனை பெரிய துனியாவில்
நீ இருக்க இடமில்லையா ?
அதை விடு மாமி ...
பால்யத்தில் நீயும் என் அப்பாவும்
மலர்த்தி , உடைத்து விளையாடுவீர்களாமே
சோப்புக்குமிழ்களை ?
அப்படியானது தான் வாழ்வும் மரணமும்
என்று நான் சொன்னதாக
நீ ஏன் வந்தவர்களுக்காக
ஒரு கவிதை எழுதக் கூடாது ?
கண்ணாடிச்சில்லுகளின் மீது போல தட்டச்சுகிறேன் ..
குமிழ்த்து முகிழ்க்கும் மலர்கள்
உதிர்கையில் கமழ்கின்றன
ஒரு குழந்தைச்சோப்பின் நறுமணம் கிளர்த்தி
குழந்தை சாராவுக்கு
..ஷஹி..
very nice... சாராவுக்கு கண்ணீர் துளிகள்
ReplyDeleteதுவா செய்யுங்கள் இஸ்மாயில் பாய் ...நோன்பு கால வாழ்த்துக்கள் .. நன்றி
ReplyDeleteவலியை கூட மென் இதழ்களில் படையலிடும் வார்த்தைகளும் உணர்வுகளும் சில்லிடுகிறது முதுகு தண்டில் அருமை ...........
ReplyDeleteநானும் கூட http://kovaimusaraladevi.blogspot.in
மிக்கவும் நன்றி சரளா ...
Deleteகுழந்தை சாராவுக்கு கண்ணீர் துளிகள்.இன்று வலைசரத்தில் ஆனந்து சார் தங்களை அறிமுகம் செய்துள்ளார். நண்பரே.
ReplyDeleteநன்றி திரு . ராசன் ... அனந்துவுக்கும் ..
Deleteதங்கள் பதிவு ஒன்றை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். நேரம் இருக்கும் போது இங்கு வந்து பாருங்கள், முகவரி கீழே.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2012/08/blog-post_17.html
நன்றி திரு. நாடோடி ... மிக்க மகிழ்ச்சி ..
Delete