Search This Blog

Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts
Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts

Sunday, September 29, 2013

நோன்பு கஞ்சி

 ( படத்தில் : உருளை போண்டா சட்னி , ஆப்பிள் ஜூஸ் , பாசிப்பருப்பு பாயசம் அண்ட் நோன்பு கஞ்சி )

சுமாரா 3 பேருக்கான ஓட்ஸ் நோன்பு கஞ்சி அளவும் , செய்முறையும்

அடுப்புல குக்கர வச்சு ரெண்டு ஸ்பூன் எண்ணெய் , ஒரு ஸ்பூன் நெய் விட்டுக்கனும் . பட்ட , கிராம்பு ஏலம் பிரியாணி இலை ஒண்ணு , அதோட ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு தாளிச்சு , ப.மிளகாய் ரெண்டு , பொடியா , நீள வாக்குல நறுக்கின பெ.வெங்காயம் ஒன்னு போட்டு வதக்கிக்கனும் . ரெண்டு தக்காளி பெசஞ்சு விட்டுட்டு , இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது அதையே பொடியா நறுக்கி சேத்துக்கங்க .

அதோட புதினா மல்லி கொஞ்சம் போட்டு வதக்கனும் . அப்பறம் ரெண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு , ரெண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு போட்டுக்கங்க . தண்ணி நாலு தம்ளர் ஊத்திக்கலாம் . இந்த சமயத்துல விருப்பம் இருந்தா மட்டன் அல்லது சிக்கன் கீமா அல்லது கேரட் துருவல் சேத்துக்கலாம் . குக்கர மூடி வெய்ட் போட்டுடுங்க , விசில் வந்தப்பறம் 10 - 15 நிமிஷம் வச்சு ஆஃப் பண்ணிடனும் . தேங்காய்துருவல் அல்லது தேங்காய்ப்பால் பிடிக்கும்னா சேத்துக்கலாம் .

ஆவி அடங்கினப்பறம் தெறந்து , ஒரு கைப்பிடி ஓட்ஸ் சேத்து, நல்லா கொதி வந்ததும் வெய்ட் போட்டு அடுப்ப ஆஃப் பண்ணிட வேண்டியது தான் . 5 நிமிஷத்துக்கப்பறம் திறந்தா சரியான பக்குவத்துல நோன்பு கஞ்சி ரெடி .

அரிசி கஞ்சி மாதிரியே தான் செய்முறை ஆனா அதுல மொதல்லியே அரிசிய போட்டுடுவாங்க , ஓட்ஸ அப்டி போட்டா கரஞ்சு கூழா போய்டும் !
அரிசி கஞ்சி செய்முறையிலேயே கோதுமை நொய் , தினை , வரகரிசி ,ரவை இதுல ஏதாவது ஒன்னு சேத்து கஞ்சி செய்யலாம் .

..ஷஹி ..

Saturday, September 28, 2013

மட்டன் பிரியாணி செய்முறை ..


ஒரு ஃப்ரெண்ட் பிரியாணி ரெசிப்பி கேட்டிருந்தா ..அவளுக்கு எழுதின மெய்ல் இது .. நாலு பேருக்கு உபயோகமா இருக்கும்னா .... :)))

ஹாய் ....
நல்ல பிரியாணிக்கு கறி , அரிசி ரேஷியோ முக்கியம் .. ஒரு கிலோ அரிசின்னா கண்டிப்பா 1.30 கிலோ கறி போடனும் ! சரி தானா ? மட்டனாயிருந்தாலும் சரி , சிக்கன்னாலும் சரி ..ஓகே ?

1.ஒரு கிலோ பாஸ்மதி அல்லது சீரக சம்பா
2. 1.30 கிலோ சிக்கன் அல்லது மட்டன்
3. முக்கால் கிலோ பெரிய வெங்காயம் , நீள வாக்கில் அரிந்தது
4. முக்கால் கிலோ தக்காளி - இயன்றவரையில் பொடியாக நறுக்கியது
5. இஞ்சி பூண்டு பேஸ்ட் மூணு குழி கரண்டி நிரம்ப
6. தயிர் - முக்கால் டம்ளர்
7. 2 எலுமிச்சைகளின் சாறு
8. ஒரு மூடி தேங்காயில் பாதியை திருகி அதை பால் பிழிந்து வைத்துக்கொள்ளவும்
9. புதினா மல்லி ரெண்டும் ஆய்ந்து தலா இரண்டு கைப் பிடி அளவு
10 .பச்சை மிளகாய் 5, 6 கீறியது
11. பட்டை , கிராம்பு ஏலம் பொடி ஒரு குழி கரண்டி அளவு
12. ரீஃபைண்ட் ஆயில் தேவையான அளவு
13. நெய் - ரெண்டு குழி கரண்டி

மொதல்ல குக்கர அடுப்புல ஏத்தி எண்ணெய் விட்டு , நெய்ல பாதிய விட்டு சூடானதும் பட்டை , கிராம்பு ஏலம் பொடி போட்டு பொரிஞ்சதும் , மிளகாய் , வெங்காயம் போட்டு வதக்கணும் . வெங்காயம் பாதி வதங்கினதும் கறிய போட்டுடு . கறி போட்டதும் உள்ளங்கைல - ஒன் கை இல்ல ..அது முறம் மாதிரில இருக்கும் ! என் கை - பாதி அளவு உப்பு சேக்கனும் . உப்பு போட்டதும் கறில இருந்து அதோட தண்ணி வர ஆரம்பிக்கும் . அந்த தண்ணி வத்த வத்த நல்லா வதக்கனும் .. இது ரொம்ப முக்கியம் - அந்த தண்ணி இருக்கும் போதே மத்ததெல்லாம் போட ஆரம்பிச்சிட்டா - கவுச்சி அடிச்சிட்டே இருக்கும் !

ஊண் தண்ணி நல்லா வத்தினதும் புதினா மல்லிய அள்ளி போடு , ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வெட்டின தக்காளிய போட்டு அதுக்கு 5 நிமிஷம் கழிச்சு இஞ்சி பூண்டு பேஸ்ட் . அப்பறம் 7 , 8 நிமிஷம் கழிச்சு , அதுல மிளகாய் தூள் --- 11/2 அல்லது ரெண்டு ஸ்பூன் தான் நான் போடுவேன் . நல்லா இந்த மசாலா எண்ண பிரிஞ்சி வரணும் . அப்பறம் தயிர் சேக்கனும் . சேத்து 5 நிமிஷம் ஆனதும் நல்லா தள தளன்னு தண்ணியா இருந்துட்டா அதுவே போதும் , இல்லனா அரை டம்ளர் தண்ணி சேத்து குக்கர மூடி வெய்ட் போட்டுடு . பாத்து ரொம்ப தீ வேண்டாம் . விசில் வந்து பத்து நிமிஷம் சிம்ல இருக்கட்டும் . அப்பறம் தெறந்து தேங்காய்பாலும் தண்ணியுமா அளந்து , பாஸ்மதினா 1 : 1 1/2 சீரக சம்பானா , 1: 2 இந்த கணக்குல தண்ணிய ஊத்திடு .

தண்ணி கொதி வரும் போதே முன்னாடியே ஊற வச்ச அரிசிய வடிச்சிட்டு போட்டுடு .. தண்ணியும் சோறுமா சேந்து வரணும் .. இப்ப ருசி பாத்துக்கலாம் .. தேவைக்கேற்ப உப்பு , மிளகாய் தூள் ஆட் பண்ணிட்டு நல்லா கெளறி விட்டுடு ..அப்பறம் லெமன் ஜூஸ் சேத்து , மீதம் இருக்குற நெய்யவும் சேத்து கிண்டி , குக்கர மூடி வெய்ட் போட்டுடு ... நல்லா சிம்ல இருக்கனும் அடுப்பு , பயமா இருந்தா ஒரு பழைய தோச கல்ல அடுப்புல போட்டு அது மேல குக்கர வச்சிட வேண்டியது தான் .. சரியா பத்து நிமிஷத்துல அடுப்ப ஆஃப் பண்ணிட்டு அங்கிட்டு 15 நிமிஷத்துல குக்கர தொறக்கலாம் .. பிரியாணி ரெடி :)

இதே சிக்கன் பிரியாணினா .. தக்காளி , மிளகாய்தூள் , இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாம் சேந்து எண்ணெய் பிரியற ஸ்டேஜ்ல தேங்காய் பால் , தண்ணி ஆட் பண்ணிடனும் .. அங்கிட்டு இருந்து எல்லாம் அதே தான் ...ஓகே வா .. ஆல் தி பெஸ்ட் .. ஏதாவது டவுட் இருந்தா கேளு.. சரி தானா ?

அன்புடன்
..ஷஹி .. 


Related Posts with Thumbnails