Search This Blog

Thursday, November 17, 2011

இட்டுத்தொலையாத முத்தம்

இதுவா அதுவா ஈரமிக்கது எந்த சொல்?

இப்படியா அப்படியா எப்படிச் சிறப்பாகச் சொல்வது இதை?

கதகதப்பாய் உணரப்படும் இது என்ன ?

அதிகம் உணர்வது நீயா நானா?

பெய்வதென்ன மழை தானா?

அதிகம் நனைந்தது இருவரில் யார்?

வெகுவாய் சுடுவது உன்னதா- என் கண்ணீரா?

பிரிவென்று வந்தால் எப்படி எதிர்கொள்வது?

அப்படியெல்லாம் வருமா என்ன?

என்றெல்லாம் யோசிப்பதற்கு அவகாசமில்லாது இருந்திருக்கலாம்

ஒரு முத்தமாவது இட்டுத் தொலைத்திருக்கலாம் தானே?

இப்போது இப்படியல்லாமல்..

உறக்கத்தில் கேவி நடுங்கும் உதடுகளை

கனவில் மினுங்கும் அதன் நினைவுகளையாவது

தடவி ஆற்றியிருக்கலாம்!

..ஷஹி..

5 comments:

  1. that was very kind ! thanks dharshan !

    ReplyDelete
  2. கவிதையில் நல்ல கேள்விகள்.... ரசித்தேன்...
    உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
    Follower ஆகி விட்டேன்... இனி தொடர்வேன்...
    பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_9.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  4. மிக்க நன்றி திரு. தனபாலன்

    ReplyDelete

Related Posts with Thumbnails