இந்தப் பேனா
நீ கொடுத்தது தான்..
.....................................
தீப்பெட்டியில் வைத்து
இரண்டு பொன்வண்டுகள் ,
வெகு காலம் வரை..
குட்டி போடும்
என,
நாம் நம்பிய மயிலிறகு,
பட்டாம்பூச்சி படமிட்ட
தபால்தலைகள்,
இதயப்படமிட்ட
வாழ்த்து அட்டைகள்,
என் கன்னமா விரல்களா
எது சிவக்குமெனப் பார்க்க
சுவரேறிக் குதித்து
நீ பறித்து வந்த
மருதாணிக் கொத்துகள்,
என் பாதம் ஏறியதால்
அழகு பெற்ற
ஒரு ஜோடிக் கொலுசுகள்..
விடைபெறும் அன்று
ஒரு பிரேதத்தினது போல்
குளிர்ந்து போன இதழ்களினால்..
அதே போல் சில்லிட்டிருந்த
உதடுகளில்
ஒரு முத்தம்.
.....................
அப்புறம்
இந்தப்
பேனா..
..ஷஹி..
சில்லென்று ஒரு நல்ல கவிதை...இனிய ரமலான் மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇப்படி ஆளாளுக்கு எனக்கு போட்டியா கிளம்பினா எப்படி?
ReplyDeleteநன்றி அனந்த்..
ReplyDeleteஉங்களுக்கு எல்லாம் போட்டியாவது? என்ன முரளி?
ReplyDelete