தன்னந்தனியளாக இருப்பதொன்றும்
புதிதல்லவே எனக்கு..
அச்சமும் குளிரும்
கவியும் இந்தப் பாலை இருளில்
ஒரு மணல் அரவம் போல்
நீ
என் மீது
வழுக்கிச்சென்ற தடங்களையும்,
தனிமையையும்
இழுத்துப் போர்த்தி
உறங்கவியல்கிறதே எனக்கு...
வெம்பகலையும்
தனிமைக் கூரை வேய்ந்து
கடந்து விடுகின்றேன்..
நழுவி நீ சென்ற இடம்
தணல் தான் என்கிறாய்...
கானலும் அப்படித்தான்..
ஊர்ந்த துன்பம் தீர
புரண்டிருந்து
மீள வருவாய்..
கள்ளியும் முள்ளுமாய்
அடைந்திருக்கும் இங்கு
என்னைத்தவிர
வேறு யார் உளர்?
...ஷஹி..
அன்பு ஷஹி,
ReplyDeleteஅற்புதமான கவிதை இது... கவிதையை மூன்றாய் பிரித்துவிடலாம்... மூன்று கவிதையிருக்கு இதில்... நல்ல வார்த்தை தெரிவும்... சொற்கட்டும்... உங்களுக்கு குறுக்கி விரிக்க முடிகிறது... ஜன்னல் துளை வழி விரியும் காட்சி போல...
அன்புடன்
ராகவன்
//வெம்பகலையும்
ReplyDeleteதனிமைக் கூரை வேய்ந்து
கடந்து விடுகின்றேன்//
தனிமை சாத்தியப்படுத்தும் கூறுகள், அருமைக்கா... :-))
ஐயோ ரொம்ப நன்றி ராகவன் சார்...நான் எதிர்பாக்கல நீங்க நல்லா இருக்குன்னு சொல்வீங்கன்னு...என் மேல எனக்கே இப்போ தான் கொஞ்சம் மரியாதையும் நம்பிக்கையும் வருது...
ReplyDeleteநன்றி முரளி...
ReplyDeleteஷஹி...மனதை வருடும் மணல் கவிதை அருமை
ReplyDeleteநன்றி அனந்த்..
ReplyDelete