Search This Blog

Saturday, September 28, 2013

கடல்பாசி புட்டிங்

 
கடல் பாசிய அகர் அகர் , சைனா க்ராஸ்னும் சொல்லுவாங்க .. உலக அளவுல நெறைய டெஸட்ஸ்ல உபயோகப்படுத்தப்படறது இந்த ஜெலடின் மாதிரியான , ஆனா .. வெஜிடேரியன் , செட்டிங் ஏஜண்ட் .நோன்பு காலத்துல எங்களுக்கு இதில்லாம முடியாது . ரொம்ப சுவையாவும் நெறய மினரல்ஸும் இருக்கறதால கண்டிப்பா நோன்பு துறக்கும் மெனுல இதிருக்கும் . நோன்புல காஞ்சு போயிருக்கற வாய்க்கும் வயித்துக்கும் அப்டி ஒரு ஆறுதல் இது ..



 இந்த படத்துல இருக்கறது .. மாம்பழத்துண்டங்களும் ஏலக்காய் பொடியும் சேத்து செஞ்சது ... ( இந்த வருட ரமலான் நோன்பில் செய்தது )


 கடல் பாசி இனிப்பு செய்முறை :

தேவையான பொருட்கள்
அரை லிட்டர் பால் ,
ஒரு பெரிய கைப்பிடி அளவு நொறுக்கின கடல் பாசி ,
ரெண்டு பெரிய குழம்புக் கரண்டி அளவு சீனி இது தான் பேஸ் .

 பால காய்ச்சி அதுல கடல் பாசிய போட்டு கரைய விடணும் . முழுக்க கரஞ்சதும் சீனிய போட்டு துளி உப்பு போட்டுக்கனும் . இது தான் அடிப்படை .

அப்பறம் அதுல கலர் , எஸ்ஸென்ஸ் , ஏலக்காய் பொடி , நறுக்கின பழங்கள் , ட்ரை ஃப்ரூட்ஸ் , நட்ஸ் இப்டி எது வேணா சேத்துக்கலாம் .என்ன மாதிரியான கன்ஸிஸ்டென்ஸில அது செட் ஆகணும்ங்கிறதும் அவங்கவங்க விருப்பம் . உதாரணத்துக்கு எங்க வீட்ல அது இளநி வழுக்கை மாதிரி இருக்கனும்னு நெனப்பாங்க , அதனால அதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சமா கடல் பாசி போட்டுக்குவோம் . சில பேருக்கு  நல்லா பர்ஃபி மாதிரி இருக்கனும் ..அவங்க நெறைய போடுவாங்க ..

சின்ன சின்ன கிண்ணங்கள்ல ஊத்தி , வேண்டிய ஃப்ளேவர் , பழங்கள் சேத்து உறைய விட்டா ரூம் டெம்பரேச்சர்லயே செட் ஆகிடும் ... ஃப்ரிஜ்ல வச்சா இன்னும் சீக்கிரமா செட் ஆகி  , ஜில்லுனும் இருக்கும் . ஒரு பாக்கெட் பாலுக்கு ரெண்டு அல்லது மூணு , நாலு பிடி கடல் பாசி போட்டா , தட்ல ஊத்தி உறைய விட்டு அல்வா அல்லது பர்ஃபி மாதிரி துண்டங்கள் போட்டு எடுக்கலாம் .

..ஷஹி ..



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails