Search This Blog

Sunday, September 29, 2013

நோன்பு கஞ்சி

 ( படத்தில் : உருளை போண்டா சட்னி , ஆப்பிள் ஜூஸ் , பாசிப்பருப்பு பாயசம் அண்ட் நோன்பு கஞ்சி )

சுமாரா 3 பேருக்கான ஓட்ஸ் நோன்பு கஞ்சி அளவும் , செய்முறையும்

அடுப்புல குக்கர வச்சு ரெண்டு ஸ்பூன் எண்ணெய் , ஒரு ஸ்பூன் நெய் விட்டுக்கனும் . பட்ட , கிராம்பு ஏலம் பிரியாணி இலை ஒண்ணு , அதோட ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு தாளிச்சு , ப.மிளகாய் ரெண்டு , பொடியா , நீள வாக்குல நறுக்கின பெ.வெங்காயம் ஒன்னு போட்டு வதக்கிக்கனும் . ரெண்டு தக்காளி பெசஞ்சு விட்டுட்டு , இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது அதையே பொடியா நறுக்கி சேத்துக்கங்க .

அதோட புதினா மல்லி கொஞ்சம் போட்டு வதக்கனும் . அப்பறம் ரெண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு , ரெண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு போட்டுக்கங்க . தண்ணி நாலு தம்ளர் ஊத்திக்கலாம் . இந்த சமயத்துல விருப்பம் இருந்தா மட்டன் அல்லது சிக்கன் கீமா அல்லது கேரட் துருவல் சேத்துக்கலாம் . குக்கர மூடி வெய்ட் போட்டுடுங்க , விசில் வந்தப்பறம் 10 - 15 நிமிஷம் வச்சு ஆஃப் பண்ணிடனும் . தேங்காய்துருவல் அல்லது தேங்காய்ப்பால் பிடிக்கும்னா சேத்துக்கலாம் .

ஆவி அடங்கினப்பறம் தெறந்து , ஒரு கைப்பிடி ஓட்ஸ் சேத்து, நல்லா கொதி வந்ததும் வெய்ட் போட்டு அடுப்ப ஆஃப் பண்ணிட வேண்டியது தான் . 5 நிமிஷத்துக்கப்பறம் திறந்தா சரியான பக்குவத்துல நோன்பு கஞ்சி ரெடி .

அரிசி கஞ்சி மாதிரியே தான் செய்முறை ஆனா அதுல மொதல்லியே அரிசிய போட்டுடுவாங்க , ஓட்ஸ அப்டி போட்டா கரஞ்சு கூழா போய்டும் !
அரிசி கஞ்சி செய்முறையிலேயே கோதுமை நொய் , தினை , வரகரிசி ,ரவை இதுல ஏதாவது ஒன்னு சேத்து கஞ்சி செய்யலாம் .

..ஷஹி ..

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails