Search This Blog

Monday, July 12, 2010

தேடினால் மட்டும்?


புத்தகக்கண்காட்சி...
பை நிறைய ஞானம்...
கை பிடித்து ஓயாமல் பேசும் பள்ளித்தோழி..
மழைச் சாரலின் போது...
பேருந்தின் சன்னலோர இருக்கை அருமை
என்று...
ரகளை ரசனையோடு சந்தோசக் கொண்டாட்டம்!
பரவசத்தில் உரக்கப் பேசினேன்..
'"உண்மை மனிதனின் கதை"..
ரஷ்ய மொழியாக்க நாவல்,
பத்தாண்டுகளாய்த் தேடுகிறேனடி...
இன்று கிடைத்தது பார்!
எல்லாம் கிடைக்கும்...
என்ன! தேட வேண்டும் அவ்வளவுதான்'...
என்றபடி வெற்றி வியாக்கியானம்!
முன்னிருக்கையில் அரைக்கண் மூடி,
அமர்ந்திருந்த பெரியவர்,
திரும்பி எனைப் பார்த்த பார்வையை...
'தூக்கம் கலைந்த துக்கம்' என நான் மொழிபெயர்க்க..
தோழியின் கூற்று வேறு!
அவர் தன் நான்கு பெண்களில்,
மூத்தவளுக்கு,கட்டுப்படியாகும் தட்சிணையில்,
பல ஆண்டுகளாய் வரன் தேடுகிரவராம்!

3 comments:

  1. பேருந்தின் ஜன்னலோரத்தில் மழைச்சாரல் அடிக்கும்!
    இன்று
    இந்த யதார்த்த கவிதைச் சாரல் அடித்ததும் ரசிக்கத்தக்கதாய் இருந்தது!

    ReplyDelete

Related Posts with Thumbnails