
கருக்கல் கொணர்ந்தது...
கருகிய காதலின் வாடையை,
இமைகளின் இடுங்கிய துடிப்பில் அறிந்தேன்..
பிரிவின் வெடிப்பை!
காந்திய ரொட்டியின் கருகல் உணர்த்தியது,
இடைவெளிகளின் அகழ்வை...
பழச்சாற்றின் பருகா மிச்சங்கள் பகர்ந்தன ,
எஞ்சியுள்ள பகைமையை...
கதவுகள் கதறின,
மனங்களின் அடைப்புகள் குறித்து...
படுக்கை விரிப்பின் அழகுரைத்தது,
உண்ணாமல் ஊசிய விருந்துகளின் கதையை...
முட்டை ஓட்டின் விரிசலில் தெரிந்தது,
அரைவேக்காட்டு அனைத்தும்...

செல்லுமுன் சொல்லிச் செல்...
நீ முடிக்காமல் விட்ட காதல் வாசகத்தை,
பிரசுரிக்கவா...
கிழித்தெறியவா ....என்று?
......ஷஹி...
"செல்லுமுன் சொல்லிச் செல்...
ReplyDeleteநீ முடிக்காமல் விட்ட காதல் வாசகத்தை,
பிரசுரிக்கவா...
கிழித்தெறியவா ....என்று? "
சொன்னால் மட்டுமென்ன
செய்யவா முடியும்?!
நினைவேறிய தலையை
கொய்யவா முடியும்?
coments la kooda kalakkal?
ReplyDeleteநன்றாக உள்ளது, அரைவேக்காடு.
ReplyDeletethank you maams....
ReplyDelete