
மௌனம் என்பதென்ன மௌனம் மட்டும் தானா?
சில மௌனங்கள் கவிதைகள் படிக்கும்!
சில மௌனங்கள் கண்ணீர் வடிக்கும்!
சில மௌனங்கள் காவியம் படைக்கும்!
ஒரு சிலர் மௌனத்தால் குடும்பங்கள் பிழைக்கும்.
சிலரின் மௌனம் போர்க்கொடி உயர்த்தும்!
சிலரின் மௌனத்தால் புன்னகை பிறக்கும்.
ஒரு சில மௌனம் நடந்தவை நினைக்கும்!
சில பேர் மௌனம் நினைத்தது நிகழ்த்தும்.
பிடிவாத மௌனம் பெருந்துன்பம் கொடுக்கும்!
பேதைகள் மௌனம் பொறுமை உணர்த்தும்...
பிள்ளையின் மௌனம் பெற்றவள் துயரம்!
புரிதலின் மௌனம் நன்மை பயக்கும்,
சில வேளை அது மயிலிறகுத்தடவல் ...
பல வேளை அது குத்தீட்டியின் குதறல்!
மௌனம் என்பதொன்றும் மௌனம் மட்டும் அல்ல!!!
ivvalo nalla kavithai padichuttu paarattama epdi maunama irukurathu?
ReplyDeleteமௌனம் சம்மதம் என்பது தவிர இத்தனை அர்த்தங்கள் புதைந்தது கிடப்பது உங்களின் மௌனம் கவிதையாகி கலைந்த பிறகு தான் தெரிந்தது. நான் என் இல்லாத காதலிக்கு (ஒரு பாதுகாப்புக்காக இப்படி எழுதுகிறேன்) எழுதிய கவிதை ஒன்றில் இப்படி எழுதினேன்.. 'என் மௌனத்தை மொழி பெயர்த்தால் அது உன் பெயரை உச்சரிக்கும்..' என்று..
ReplyDelete