
அன்பு தொலைந்து போனால்....
அம்மாவிடம் இருக்கும் மிச்சம்!கவலையில்லை!
பாசம் காணோமா?...
பச்சிளம் பிள்ளை முகம் பார்..
மண் பிளக்கும் மழையென மனம் பிளந்து பீறிடும்!
நட்பா தொலைந்தது?
தேடத்தகுந்த இடம் பழைய பள்ளித்தோழியின் உள்ளம் தான்!
இளமை இல்லையா?..
இயலாமை விரட்டு..
செல்வமா தேடுவது?
சோம்பல் தொலை...
தூக்கமா தொலைத்தாய்?
ஆசை அழி...அழமாய்த் துயில..
ஞானமா? பெரியோர் நட்பில் பெருகும் பார்!
அறிவு?
நூல் பல வாசி!நூலகத்தில் வசி!!
காதல் காணவில்லையா?
உன் கூந்தல் நரையில் தான் சிக்கியிருக்கும்..தேடு!
மகிழ்ச்சி எங்கே?
மனதில் தான்...
பெருமை?
ஆ!!!..அது பிள்ளைகள் தேடித்தரணும்..
இன்பம் இல்லையா?
ஒப்பீடு நிறுத்து ..ஒரு வேளை கிட்டலாம்!
சுதந்திரமா தொலைந்தது?
உடன் பிறந்ததாயிற்றே?தொலைத்தால் தொலைந்தாய் போ!
சிங்காரம் போனதோ?
பிள்ளைகள் ஏராளமோ?..
ஆரோக்கியம் இல்லையா?
உள்ளம் சீர் செய்!
அழகு இல்லையா?
அவசியம் இல்லை...விடு!
மனிதம் தொலைத்தாயா?
மரணி உடனே....
நூல் பல வாசி, நூலகத்தில் வசி.
ReplyDeleteமனிதம் தொலைத்தாயா, மரணி உடனே.
இவ் வரிகள் அருமையிலும் அருமை.
கவிதை நயம் நன்றாக உள்ளது.
nandri maams...
ReplyDelete